திருப்பூர்

காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் கட்டுவதற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு: முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம்

22nd Feb 2021 04:13 PM

ADVERTISEMENT

 

காங்கயம்: காங்கயத்தில் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஒன்றியக்குழு தலைவர் டி,மகேஷ்குமார் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றிய ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு ரூ.3 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிப்பது, காங்கயம் ஒன்றியத்தில் உள்ள 15 ஊராட்சிகளுக்கும் புதிய மின் விளக்குகள் அமைப்பது உள்ளிட்ட 30 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.

இதில், வட்டார வளர்ச்சி அலுவலர் மகுடேஸ்வரி, ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஜே.ஜீவிதா ஜவஹர் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT