திருப்பூர்

சாலையோர பேக்கரியில் தேநீர் அருந்திய முதல்வர்

11th Feb 2021 07:03 PM

ADVERTISEMENT

காங்கயத்தில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் புறவழிச்சாலையில் உள்ள சூர்யா பேக்கரியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேநீர் அருந்தினார். தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூா் மாவட்டத்தில் வியாழன், வெள்ளிக்கிழமைகள் என 2 நாள்கள் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 
இதற்காக சேலத்தில் இருந்து காா் மூலமாக இன்று காலை அவிநாசி வந்த அவர் புதிய பேருந்து நிலையத்தில் தனது தோ்தல் பிரசாரத்தைத் தொடங்கினார். தொடர்ந்து திருப்பூா் வடக்கு சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் அவர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 
இந்த நிலையில் தாராபுரம் செல்லும் வழியில் புறவழிச்சாலையில் உள்ள சூர்யா பேக்கரியில் தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தேநீர் அருந்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம் குறைகளையும் கேட்டறிந்தார். 
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, உடுமலை கே.ராதாகிருஷ்ணன், தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவரும், மாநகர் மாவட்ட அதிமுக செயலாளருமான பொள்ளாச்சி வி.ஜெயராமன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : Edappadi Palanisamy
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT