திருப்பூர்

அவிநாசியில் பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடி பறிப்பு

6th Feb 2021 09:13 PM

ADVERTISEMENT

அவிநாசியில் பெண்ணிடம் 7 பவுன் தாலிக்கொடி பறித்துச் சென்ற மர்ம நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அவிநாசி மங்கலம் சாலை, கொடிகாத்த குமரன் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் மனைவி லாவண்யா(28). இவரது தாயார் சாந்தினி(58). இவர்கள் இருவரும் அவிநாசி புறவழிச்சாலை தேவம்பாளையம் பிரிவு அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு சனிக்கிழமை இரவு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் தனது வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

வஞ்சிபாளையம் பிரிவு அருகே வந்த போது, இவர்களை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள், லாவண்யா கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் தாலிக்கொடியை பறித்து தப்பிச் சென்றனர். இது குறித்து அவிநாசி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Avinashi
ADVERTISEMENT
ADVERTISEMENT