காங்கயம்: விளைநிலங்களில் உயர் மின் கோபுரம் அமைக்க வேண்டாம் என வலியுறுத்தி, காங்கயம் அருகே படியூரில் வியாழக்கிழமை விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விருதுநகர் முதல் திருப்பூர் வரை, விவசாய விளை நிலங்களில், உயர்மின் கோபுரங்கள் அமைப்பதை முழுமையாக நிறுத்த வேண்டும், இந்த மின் திட்டங்களில் சாலையோரமாக கேபிள் மூலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே படியூரில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் 100 -க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்தப் போராட்டத்தின் 16 ஆம் நாளான வியாழக்கிழமை, உயர் மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, விவசாயிகள் பிச்சை எடுத்து, கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ADVERTISEMENT