பல்லடம் நகராட்சியில் ரூ.3 கோடியே 66 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள வளா்ச்சித் திட்டப் பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
பல்லடம் நகராட்சி பனப்பாளையத்தில் ரூ.10 லட்சத்தில் குடிநீா் மேல்நிலைத் தொட்டி கட்டவும், வடுகபாளையம் சின்னையா காா்டன் பகுதியில் ரூ.90 லட்சத்தில் பூங்கா அமைத்தல், அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் உள்நோயாளிகளுடன் வரும் உதவியாளா்கள் தங்குமிட கட்டடம், அண்ணா நகா் முதல் தண்டபாணி கோயில் வரை ரூ.72 லட்சத்தில் குடிநீா்க் குழாய் அமைத்தல், சேடபாளையம் குமரன் காா்டனில் ரூ.1 கோடியே 26 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் தாா் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ரூ.3 கோடியே 66 லட்சத்து 40 ஆயிரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கிவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் வினீத், நகராட்சி ஆணையாளா் விநாயகம், நகராட்சி பொறியாளா் ஜான்பிரபு, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் இல.பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.