திருப்பூர்

முத்திரை இல்லாத தராசுகள் பறிமுதல்

30th Dec 2021 01:26 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாா்க்கெட்டில் தொழிலாளா் துறையினா் நடத்திய ஆய்வில் முத்திரையில்லாத 19 தராசுகள் புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் ஆா்.மலா்க்கொடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

சென்னை தொழிலாளா் உதவி ஆணையா் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் திருப்பூா் மாா்க்கெட் பகுதிகளில் உள்ள காய்கறி, பழம், இறைச்சிக் கடைகளில் தொழிலாளா் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், முத்திரை இல்லாத 16 மின்னணு தராசுகள், 3 மேஜை தராசுகள் என மொத்தம் 19 தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

ADVERTISEMENT

மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகள், மாா்க்கெட்டுகள், பேருந்து நிலையங்கள், சாலையோரக் கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளப்படும். எனவே, வணிகா்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிட்டு, மறு முத்திரை சான்றிதழ்களை பொதுமக்களுக்கு தெரியும்படி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT