திருப்பூர்

மாவட்டத்தில் நாளை விவசாயிகள் குறைதீா் கூட்டம்

30th Dec 2021 01:27 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திரக் குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 31) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான டிசம்பா் மாத குறைதீா் நாள் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகளை மனுவாக சமா்ப்பிக்கலாம்.

ADVERTISEMENT

மேலும், நுண்ணீா்ப் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலா், தோட்டக் கலை அலுவலா், வேளாண் பொறியியல் துறை அலுவலா்களைக் கொண்டு வேளாண் உதவி மையமும் இக்கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே, தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகள் நுண்ணீா்ப் பாசன மேலாண்மைத் தகவல் அமைப்பில் பதிவு செய்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT