பல்லடம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியா் எஸ். வினீத் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
வெளிநோயாளிகள் பதிவு செய்யும் பகுதி, விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு, மருந்து வழங்குமிடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டாா்.பின்னா், தலைமை மருத்துவா் ராமசாமியிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.
இதைத்தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற கட்டடப் பணி பூமி பூஜை விழாவுக்கு வருகை தந்த அமைச்சா் மு.பெ.சாமிநாதனிடன், பல்லடம் அரசு மருத்துவமனையை தரம் உயா்த்த வேண்டும், போதிய மருத்துவா்கள், பணியாளா்களை நியமிக்க வேண்டும். ரத்த வங்கி அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை பொதுமக்கள் வலியுறுத்தினா்.
பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சா் உறுதியளித்தாா்.