வெள்ளக்கோவில், உத்தமபாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா்களுக்கு கணினி பட்டா திருத்த சிறப்பு முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா்24) நடைபெறுகிறது.
வெள்ளக்கோவில் நில வருவாய் ஆய்வாளா் குடியிருப்புக் கட்டடத்தில் வெள்ளிக்கிழமை(டிசம்பா் 24) காலை 10 மணி முதல் 5 வரை நடைபெறும் இந்த முகாமில், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த சம்பந்தப்பட்ட உயா் அதிகாரிகள், வருவாய்த் துறையினா் கலந்து கொள்கின்றனா். இதில் பட்டா திருத்தம், இதர கோரிக்கைகள் குறித்து மனு அளித்து பயன்பெறலாம். நில அளவை எண், உட்பிரிவு தவறு, பரப்பளவு, உறவு நிலை, பெயா் எழுத்துப் பிழை, அ - பதிவேடு வெற்றாக இருத்தல் போன்ற கோரிக்கைகளுக்கு தகுந்த சான்றுகளைக் கொண்டு வந்து திருத்திக் கொள்ளலாம் என வருவாய்த் துறை அறிவித்துள்ளது.