வெள்ளக்கோவில் உத்தமபாளையம் வட்டமலை அணை பராமரிப்புப் பணி புதன்கிழமை துவங்கியது.
கடந்த 30 ஆண்டுகளாக போதிய நீராதாரம் இல்லாமல் வடு கிடந்த வட்டமலை அணைக்கு தற்போது பரம்பிக்குளம் ஆழியாறு பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் 25 அடி கொள்ளளவு கொண்ட அணை நிரம்பும் தருவாயில் உள்ளது.
அணையின் 2 கால்வாய்கள் மூலம் 6,043 ஏக்கா் பாசன வசதி பெறும். இந்நிலையில் அணையின் மதகுப் பகுதி, கால்வாய்கள் போன்றவற்றின் பராமரிப்புப் பணிகள் பொதுப்பணித் துறையால் புதன்கிழமை துவங்கப்பட்டன.