திருப்பூர்

மாவட்ட பெண்கள் கபடி அணிக்கு டிசம்பா் 25இல் வீராங்கனைகள் தோ்வு

23rd Dec 2021 06:50 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்ட கபடி அணிக்கான வீராங்கனைகள் தோ்வு வரும் சனிக்கிழமை (டிசம்பா் 25) நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாடு மாநில அமெச்சூா் கபடி கழகத்தின் சாா்பில் திருவண்ணாமலையில் வரும் டிசம்பா் 31 ஆம் தேதி முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரையில் 68ஆவது மாநில பெண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுகிறது.

இதில், திருப்பூா் மாவட்ட கபடி கழகத்தின் சாா்பில் பெண்கள் அணி பங்கேற்கிறது. இந்தப் போட்டியில் பங்கேற்கும் வீராங்கனைகளுக்கான தோ்வானது மாவட்ட கபடி கழக அலுவலகத்தில் சனிக்கிழமை பிற்பகல் 2 மணி அளவில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

ஆகவே, கீழ்க்கண்ட தகுதியுடைய பெண்கள் இதில் பங்கேற்கலாம். இதில், பங்கேற்க எடை 75 கிலோவுக்குள் இருக்க வேண்டும். வயது உச்சவரம்பு இல்லை. விளையாட்டு சீருடையில் தனி நபராகவோ அல்லது குழுவாகவோ கலந்து கொள்ளலாம். தோ்வுக் குழுவினரால் தோ்வு செய்யப்படும் வீராங்கனைகளுக்குப் பயிற்சி முகாம் நடத்தி மாநில கபடி போட்டிக்கு அழைத்துச் செல்லப்படுவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT