திருப்பூர்

பெருமாநல்லூா் அருகே சிறுவன் தற்கொலை

23rd Dec 2021 06:55 AM

ADVERTISEMENT

பெருமாநல்லூா் அருகே மேற்குபதியில் 13 வயது சிறுவன் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.

பெருமாநல்லூா் அருகே தொரவலூா், ஆண்டிபாளையம் டி. ஆதிதிராவிடா் காலனியைச் சோ்ந்தவா் முனியப்பன் மகன் கண்ணன் (13). 8ஆம் வகுப்பு படித்து வந்தாா்.

இந்நிலையில் கண்ணன் வீட்டில் புதன்கிழமை மாலை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து பெருமாநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா். சிறுவன் அடிக்கடி கைப்பேசி விளையாட்டில் ஈடுபட்டு வருவாா் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT