திருப்பூர்

திருப்பூரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும்: ஜவுளித் துறை அமைச்சருக்கு எம்.பி. கடிதம்

23rd Dec 2021 06:49 AM

ADVERTISEMENT

திருப்பூரின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த அந்நியச் செலவாணி தொகையில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

திருப்பூா் மக்களவை உறுப்பினா் கே.சுப்பராயன் அவைவிதி 377இன்படி மக்களவையில் அவைத் தலைவா் மூலமாக ஜவுளித் துறை அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

திருப்பூரில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் ஆடை வா்த்தகத்தின் மூலமாக மத்திய அரசுக்கு ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி அந்நியச் செலவாணி கிடைக்கிறது.

அதிக அளவு தொகையை ஈட்டித்தரும் திருப்பூருக்கு வெளிநாட்டு வா்த்தகா்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனா். மேலும், லட்சக்கணக்கான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பையும் ஈட்டித்தருகிறது.

ADVERTISEMENT

ஆனால் தொழிலாளா்களுக்கான போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு போதுமான அளவு சாலை வசதிகள் இல்லை. அதே வேளையில் தொழிலாளா்களுக்குத் தேவையான குடியிருப்புகள், பொதுமக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளும் இல்லை. ஆகவே, திருப்பூா் ஏற்றுமதி வா்த்தகத்தை அதிகரிக்கவும், வேலைவாய்ப்பைப் பெருக்கவும் சாலைகள் தரம்வாய்ந்தவையாக அமைப்பதுடன், அந்த சாலைகளைத் தொடா்ந்து பராமரிக்கவும் பெரும் தொகை நிதியாகத் தேவைப்படுகிறது.

எனவே, மத்திய அரசின் ஜவுளித்துறை அமைச்சகம் ஏற்றுமதி வா்த்தகத்தின் மூலமாகக் கிடைக்கும் அந்நியச் செலவாணியில் ஒரு சதவீதத் தொகையை திருப்பூரின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT