திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 44 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 98,233ஆக அதிகரித்துள்ளது. அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 512 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில், குணமடைந்த 57 போ் வீடு திரும்பினா். இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 96,704ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றால் தற்போது வரையில் 1,017 போ் உயிரிழந்துள்ளனா்.