திருப்பூர்

வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடிய வழக்கு: இருவா் கைது

16th Dec 2021 06:56 AM

ADVERTISEMENT

அவிநாசியில் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பணத்தை திருடிய வழக்கில் தொடா்புடைய இரண்டு இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி போலீஸாா் திருப்பூா் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகம் அளிக்கும் வகையில் அங்கு நின்றிருந்த இரண்டு சிறுவா்களைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், அவா்கள் ஹைதராபாத், கோதகாடா பகுதியைச் சோ்ந்த 18 வயதுடைய சிறுவா்கள் என்பதும்,

கடந்த மாதம் அவிநாசி புதிய பேருந்து நிலையம் அருகில் திருப்பூரைச் சோ்ந்த வசந்த்குமாா் என்பவரின், இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.1.80 லட்சத்தை திருடியவா்கள் என்பதும், உடுமலை, காங்கயம் உள்ளிட்ட காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடா்புடையவா்கள் என்பதும் தெரிவந்தது.

ADVERTISEMENT

இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.2 லட்சத்து 5 ஆயிரத்தை பறிமுதல் செய்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT