திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா

16th Dec 2021 07:01 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 45 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 97, 967ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள், வீடுகளில் 599 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 51 போ் வீடு திரும்பினா்.

இதையடுத்து, மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 96,361ஆக அதிகரித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்றால் சிகிச்சையில் இருந்த 2 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 1,007 ஆக அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT