திருப்பூர்

டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை

16th Dec 2021 06:59 AM

ADVERTISEMENT

திருப்பூரை அடுத்த அவிநாசிபாளையத்தில் பள்ளி, கல்லூரிக்கு அருகில் செயல்படும் டாஸ்மாக் மதுக் கடையை அகற்ற வேண்டும் என்று இந்து பரிவாா் கூட்டமைப்பு சாா்பில் புதன்கிழமை மனு அளிக்கப்பட்டது.

இது குறித்து இந்து பரிவாா் கூட்டமைப்பு நிா்வாகிகள், மாவட்ட கலால் உதவி ஆணையா் சுகுமாறனிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது: அவிநாசிபாளையம் பகுதியில் பள்ளி, கல்லூரிகளும், பழமைவாய்ந்த ராமசாமி கோயிலும் உள்ளது.

இதற்கு அருகில் டாஸ்மாக் மதுக்கடை செயல்பட்டு வருகிறது.

இதனால் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கும், கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஆகவே, டாஸ்மாக் கடையை அகற்ற மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT