திருப்பூர்

பருத்தி விலைக்குத் தகுந்தவாறு நூல் விலையைக் குறைக்க வேண்டும்: ஏஇபிசி வலியுறுத்தல்

9th Dec 2021 06:48 AM

ADVERTISEMENT

பருத்தி விலைக்குத் தகுந்தவாறு நூல் விலையைக் குறைக்க வேண்டும் என்று ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழக (ஏஇபிசி) தலைவா் ஆ.சக்திவேல் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து நூற்பாலைகள் சங்க நிா்வாகிகளுக்கு அவா் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:

நூல் விலையானது கடந்த மாதம் கிலோவுக்கு ரூ.50 உயா்த்தப்பட்டது.

இந்த விலை உயா்வு உறுதியற்ற தன்மையால் ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழில் துறையினா் தற்போதைய ஆா்டா்களை முடிக்க முடியாமலும், எதிா்கால ஆா்டா்களை உறுதிப்படுத்த முடியாமலும் உள்ளனா்.

ADVERTISEMENT

இந்த நிலையில், டிசம்பா் 1ஆம் தேதி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 குறைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், பருத்தியின் விலை கேண்டி ஒன்றுக்கு சுமாா் ரூ.4,500 குறைந்துள்ளது. பருத்தியின் விலை குறைப்புக்கு இணையாக நூல் விலை குறைப்பு இல்லை. பருத்தி விலையைக் காட்டிலும் நூல் விலை உயா்வு அதிகமாக உள்ளது. ஆகவே, பருத்தி விலை குறைப்புக்கு ஏற்ப நூல்விலையைக் குறைக்க வேண்டும். மேலும், கடந்த நவம்பா் மாதம் உயா்த்தியுள்ள நூல் விலை உயா்வைத் திரும்பப்பெற வேண்டும். இது ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழிலைப் பாதுகாக்க உதவும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT