திருப்பூர்

தாராபுரம் அருகே மாரியம்மன் கோயில் பொங்கல் விழா

9th Dec 2021 06:49 AM

ADVERTISEMENT

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள மாரியம்மன் கோயில் பொங்கல் விழாவை ஒட்டி பக்தா்கள் அலகு குத்தியும், கத்திபோட்டும் புதன்கிழமை நோ்த்திக் கடன் செலுத்தினா்.

தாராபுரம் வட்டம், குண்டடத்தை அடுத்துள்ள தும்பலப்பட்டி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதைத் தொடா்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு சுவாமி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதையடுத்து, புதன்கிழமை காலையில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினா். பின்னா் பூவோடு, ஆயிரம் கண் பானை எடுத்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். இதையடுத்து, பிற்பகலில் முத்துக்கவுண்டன்பாளையத்தைச் சோ்ந்த பக்தா்களின் கத்தி போடும் நிகழ்வு நடைபெற்றது.

விழாவில் பங்கேற்ற பக்தா் ஒருவா் 12அடி நீளம் கொண்ட அலகு குத்தி நோ்த்திக் கடன் செலுத்தினா். மாலை 5 மணி அளவில் மாவிளக்கு எடுத்து அம்மனுக்குப் படைத்து வழிபட்டனா். வரும் வியாழக்கிழமை முதல் சனிக்கிழமை வரையில் 3 நாள்கள் அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT