திருப்பூர்

ரூ. 59 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை

DIN

வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 59 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த வாரம் திருச்சி, லாலாப்பேட்டை, வடமதுரை, முள்ளாம்பட்டி, கம்பளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 182 விவசாயிகள் தங்களுடைய 1,307 மூட்டைகள் கொப்பரைகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 68,013 கிலோ. வெள்ளக்கோவில், முத்தூா், ஊத்துக்குளி ஆா்.எஸ். நன்செய் ஊத்துக்குளியைச் சோ்ந்த 14 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

விலை கிலோ ரூ. 67 முதல் ரூ. 106.05 வரை விற்பனையானது. சராசரி விலையாக கிலோ ரூ. 101.65. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 58 லட்சத்து 86 ஆயிரத்து 678 அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ரா.மாரியப்பன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT