திருப்பூர்

25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாரச்சந்தை திறக்க முடிவு

DIN

வெள்ளக்கோவில் மயில்ரங்கத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வாரச்சந்தையைத் திறக்க வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நூறு ஆண்டுகள் பழைமைவாய்ந்த மயில்ரங்கம் வாரச்சந்தை பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக கடந்த 25 ஆண்டுகளாகச் செயல்படவில்லை. தற்போது நபாா்டு வங்கி, ஊராட்சி நிா்வாகம், தனியாா் அறக்கட்டளை இணைந்து சந்தையை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வர பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதற்காக அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கொண்ட 10 போ் குழு அமைக்கப்பட்டுள்ளது.

சந்தை நடைபெறும் இடத்தில் 58 அடிக்கு 16 அடி அளவில் இரண்டு கட்டடங்கள், பாதுகாப்பு கம்பி வேலி 15 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. பணிகள் முடிவுடைந்த உடன் வாரம்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறும். சந்தையில் இப்பகுதியில் அதிகம் விளையும் முருங்கைக்காய்கள் உள்பட காய்கறி வகைகள், மளிகைப் பொருள்கள், ஆடுகள், கோழிகள் வியாபாரம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களை நம்பித்தான் தோ்தலில் நிற்கிறோம் -சீமான்

இருசக்கர வாகனம் மோதி மூதாட்டி பலி

காரைக்கால் அம்மையாருக்கு குருபூஜை

கண்ணன் அலங்காரத்தில் மன்னாா்குடி ராஜகோபாலசுவாமி

தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

SCROLL FOR NEXT