திருப்பூர்

திருப்பூர்: சாலைகளை செப்பனிட வலியுறுத்தி மரக்கன்று நடும் போராட்டம்

DIN


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்கு உள்பட்ட நெருப்பெரிச்சல் பகுதியில்  குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை செப்பனிடவும், அப்பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மரக்கன்று நடும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நெருப்பெரிச்சல் தோட்டத்துபாளையம் சாலையில் அஸ்வதி கம்பெனி அருகில் தேங்கியிருந்த சேறும் சகதியுமான சாலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மரக்கன்றுகள் நட்டனர். இப்போராட்டத்திற்கு தோட்டத்து பாளையம் மாதர் கிளைச் செயலாளர் ஏ.மங்க லட்சுமி தலைமை வகித்தார்.

இதில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கட்சியினர் கூறியதாவது:

பல ஆண்டு காலமாக தோட்டத்து பாளையம் நெருப்பெரிச்சல் பகுதியில் வடிகால் வசதி இல்லாமல் சாலைகளில் கழிவுநீர் மழைநீர் தேங்கி சாலை குண்டும் குழியுமாக வும் சேறும் சகதியுமாக உள்ளது.

மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தும் சூழ்நிலையில் அவ்வப்போது தற்காலிகமாக மண்ணை கொட்டி சரி செய்யும் ஏற்பாட்டை மட்டுமே மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். இந்தநிலையில் அண்மையில் மழை பெய்த சூழ்நிலையில் இப்பகுதியில் களிமண்ணால் தேங்கி இருந்த சாலையில் 15க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் சென்ற போது வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்தனர். எனவே இப்பகுதியில் இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக வடிகால் வசதியை ஏற்படுத்தி மழைநீர் கழிவுநீர் வெளியேறி செல்ல நிரந்தர ஏற்பாடு செய்ய வேண்டும், அத்துடன் மோசமான நிலையில் உள்ள இப்பகுதி சாலையை சீரமைக்க வேண்டும். பிஎன் ரோடு பூலுவபட்டி சந்திப்பிலிருந்து வாவிபாளையம் வரை குண்டும் குழியுமான சாலையை புதிய தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும் என்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.மைதிலி, வடக்கு ஒன்றிய குழு உறுப்பினர் ஆ.சிகாமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் இப்பகுதி பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால் நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டத்தில் பங்கேற்ற ஒரு எச்சரிக்கை விடுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒசூா் அரசு மருத்துவமனையில் மருத்துவத் துறை இயக்குநா் ஆய்வு

அதிமுக- திமுக நிா்வாகிகளிடையே மோதல்: போலீஸாா் விசாரணை

கோடை மழையில் குளிா்ந்தது ஒசூா்

வாக்குப் பதிவுக்குப் பின் தோ்தல் விதிமுறைகளை தளா்த்த கோரிக்கை

தீத்தொண்டு வார விழா: துண்டுபிரசுரங்கள் விநியோகம்

SCROLL FOR NEXT