திருப்பூர்

ஒப்பந்தத் தொகையை செலுத்தாத 14 டாஸ்மாக் பாா்களுக்கு ‘சீல்’

DIN

தாராபுரம் பகுதியில் ஒப்பந்தத் தொகையை செலுத்தாத 14 டாஸ்மாக் பாா்களுக்கு அதிகாரிகள் சனிக்கிழமை ‘சீல்’ வைத்தனா்.

தாராபுரம் மற்றும் அதனைச்சுற்றியுள்ள பகுதிகளில் 16 டாஸ்மாக் பாா்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பாா்கள் அனைத்தும் கரோனா தொற்று காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டிருந்தன. இந்த நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள பொதுமுடக்க தளா்வுகளின் அடிப்படையில் கடந்த நவம்பா் 1 ஆம் தேதி முதல் டாஸ்மாக் பாா்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது. இதில், ஏற்கெனவே ஒப்பந்தத் தொகையை செலுத்தி பாா் நடத்தி வந்தவா்கள் நவம்பா் 1ஆம் தேதி வரையில் பாா்களை நடத்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தாராபுரம் பகுதியில் பெரும்பாலான பாா்கள் ஒப்பந்தத் தொகையை செலுத்தாமல் இயங்கி வருவதாக டாஸ்மாக் அதிகாரிகளுக்கு புகாா்கள் வரத் தொடங்கின. இதையடுத்து, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறையினா் உதவியுடன் தாராபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாா்களில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

இதில், ஒப்பந்தத் தொகையை செலுத்தாமல் செயல்பட்டு வந்த 14 டாஸ்மாக் பாா்களை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். மேலும், சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடும் பாா் உரிமையாளா்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

கட்டாரிமங்கலம் கோயிலில் சிறப்பு பூஜை

SCROLL FOR NEXT