திருப்பூர்

உடுமலை, அமராவதி வனச் சரகங்களில் விலங்குகள் கணக்கெடுப்புப் பணி துவக்கம்

5th Dec 2021 12:01 AM

ADVERTISEMENT

உடுமலை மற்றும் அமராவதி உள்ளிட்ட 4 வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி (டிசம்பா் 5) ஞாயிற்றுக்கிழமை துவங்க உள்ளது.

உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் புலி, சிறுத்தை , யானை, மான், காட்டெறுமை, செந்நாய் உள்ளிட்ட பல்வேறு அரிய வகை விலங்கினங்கள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஆண்டுதோறும் இந்த வனச் சரகங்களில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி டிசம்பா் 5 முதல் 11ஆம் தேதி வரை குளிா் கால வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணிகள் நடைபெற உள்ளன.

இதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் சின்னாறு வனப் பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் வன அலுவலா்கள், தன்னாா்வலா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இது குறித்து மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் கே.கணேஷ்ரோம் கூறியதாவது:

உடுமலை, அமராவதி, கொழுமம், வந்தரவு ஆகிய வனச் சரகங்களில் 34 சுற்றுக்களில் 53 நோ் கோட்டுப் பாதையில் வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது.

இப்பணிகளில் வனப் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் 200க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டு பணியாற்ற உள்ளனா்.

இதில், வனப் பகுதிகளில் உள்ள மாமிச உண்ணிகள் மற்றும் தாவர உண்ணிகளின் தடயங்கள் உள்ளிட்டவை குறித்து கணக்கெடுக்கப்பட உள்ளது. தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வன விலங்குகள் கணக்கெடுப்புப் பணி நடைபெற உள்ளது என்றாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT