திருப்பூர்

மாநகரில் நாளை குடிநீா் விநியோகம் நிறுத்தம்

5th Dec 2021 12:01 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் (டிசம்பா் 6) திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

இது குறித்து மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மூன்றாவது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், பவானியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் மின் பராமரிப்புப் பணிகள் திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளது.

ஆகவே, மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதேவேளையில், மாநகராட்சிப் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை முதல் தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT