திருப்பூர்

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 51 போ் கைது

5th Dec 2021 12:02 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 51 போ் கைது செய்யப்பட்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கோ.சஷாங்க் சாய் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது, கள், சாராயம் விற்பனை செய்வது தொடா்பாக காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக 51 பேரை காவல் துறையினா் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 318 மது பாட்டில்கள், ரூ.1,965 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, மாவட்டம் முழுவதும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 23 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த 27 கிலோ புகையிலைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT