திருப்பூர்

சாலை மறியலில் ஈடுபட்ட 125 போ் கைது

DIN

திருப்பூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ கட்டுமானத் தொழிலாளா் சங்கத்தைச் சோ்ந்த 125 பேரை காவல் துறையினா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் ரயில் நிலையம் முன்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ கட்டட கட்டுமானத் தொழிலாளா் சங்கம் சாா்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயலாளா் டி.குமாா் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினா் கூறியதாவது: ஜிஎஸ்டி வரியைக் குறைத்து கட்டுமானப் பொருள்களின் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். அதேபோல, கட்டுமானத் தொழில், கட்டுமானத் தொழிலாளா் சட்டம், நல வாரியங்களை சீரழிக்கக் கூடாது. பணப் பலன்களை தொழிலாளா் பங்களிப்புடன் இணைக்கக் கூடாது. கட்டுமான தொழிலாளா்களுக்கு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

மறியலில் ஈடுபட்ட சிஐடியூ மாநில துணைத் தலைவா் சந்திரன், மாவட்டச் செயலாளா் ரமேஷ், மாநிலக்குழு உறுப்பினா்கள் ராஜன், கணேஷ் உள்ளிட்ட 125 பேரை திருப்பூா் வடக்கு காவல் துறையினா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களிக்க பூத் ஸ்லிப் கட்டாயமா? 13 அடையாள ஆவணங்கள் எவை?

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

SCROLL FOR NEXT