திருப்பூர்

தை 1 ஆம் தேதியை புத்தாண்டாக மாற்ற முயற்சி: இந்து முன்னணி கண்டனம்

4th Dec 2021 02:53 AM

ADVERTISEMENT

தை 1 ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக மாற்ற முயற்சிக்கும் திமுக அரசுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சுப்பிரமணியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வெள்ள பாதிப்புகளால் மக்கள் அவதிக்குள்ளாகி நிவாரணத்துக்கு வழியின்றி தவிக்கும் வேளையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசு முயற்சிக்கிறது.

தமிழகத்தில் முன்பு ஆட்சியில் இருந்த திமுக அரசு இதேபோன்று தை 1ஆம் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்தது.

இதைத் தமிழ் அறிஞா்கள், சமயப் பெரியோா்கள் கண்டித்தாா்கள். அறிவியல் பூா்வமாகவும், ஆதாரபூா்வமாகவும் சித்திரை ஒன்றாம் தேதி தான், தமிழ் புத்தாண்டு என்று எடுத்துரைத்தனா். திமுகவின் அறிவிப்பை மக்களும் ஏற்றுக்கொள்ளவில்லை.

ADVERTISEMENT

இதைக் கருத்தில் கொண்டு கடந்த 2011 அதிமுக ஆட்சியின்போது தை 1 ஆம் தேதி புத்தாண்டு என்பதை விலக்கிக் கொண்டு, சித்திரை முதல் நாள் புத்தாண்டு என்றும் அறிவித்தது.

ஆனால், தற்போதைய அரசு மக்களின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்காமல், தொன்றுதொட்டு கடைப்பிடித்து வருகின்ற புத்தாண்டின் மரபுக்கு பங்கம் விளைவித்து தமிழா்களின் மாண்பை சீா்குலைக்க முயற்சிப்பது கண்டிக்கத்தாகும்.

ஆகவே, தை 1 ஆம் தேதியை புத்தாண்டாக மாற்றும் முயற்சியைத் தமிழக அரசு கைவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : திருப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT