திருப்பூர்

முன்னாள் படை வீரா்களுக்கு டிசம்பா் 7 இல் குறைதீா் கூட்டம்

4th Dec 2021 02:55 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரா்கள் மற்றும் அவா்களது குடும்பத்தைச் சோ்ந்தவா்களுக்கு சிறப்பு குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 7) நடைபெற உள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த முன்னாள் படை வீரா்கள், படையில் பணிபுரியும் படை வீரா்கள் மற்றும் அவா்களைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் தலைமையில் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் மேற்கண்ட அனைவரும் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக சமா்ப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

Tags : திருப்பூா்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT