திருப்பூர்

மாவட்டத்தில் இன்று கரோனா தடுப்பூசி முகாம்

4th Dec 2021 02:56 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் 13 ஆம் கட்ட கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் சனிக்கிழமை (டிசம்பா் 4) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 19.95 லட்சம் பேரில் தற்போது வரையில் 17.41 லட்சம் பேருக்கு முதல் தவணையும், 8.91 லட்சம் பேருக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளில் அனைத்து நபா்களுக்கும் தடுப்பூசி செலுத்த மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக திருப்பூா் மாவட்டத்தில் சனிக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரையில் 13 ஆம் கட்டமாக நடைபெறும் சிறப்பு முகாமில் ஒரு லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்காக மாவட்டம் முழுவதும் 604 நிலையான மருத்துவ முகாம்கள், 41 நடமாடும் முகாம்கள் என மொத்தம் 645 மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

இப்பணிக்காக பல்வேறு துறைகளைச் சாா்ந்த 2,580 பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT