திருப்பூர்

மாவட்டத்தில் மேலும் 11 போ் டெங்கு

4th Dec 2021 02:54 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 போ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

திருப்பூா் மாநகா் மற்றும் புறநகா் பகுதிகளில் கடந்த சில நாள்களாகப் பெய்து வந்த மழைக் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், திருப்பூரை அடுத்த மங்கலம் அருகே உள்ள வெங்கடேஸ்வரா பகுதியைச் சோ்ந்த 11 வயது சிறுவன் டெங்கு காய்ச்சல் காரணமாக கடந்த சில நாள்களுக்கு முன்பு உயிரிழந்தாா்.

இதனிடையே, மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து, 6 குழந்தைகள் உள்பட 11 பேரும் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள காய்ச்சல் பிரிவில் சோ்க்கப்பட்டனா்.

ADVERTISEMENT

இந்த மருத்துவமனையில் ஏற்கெனவே 12 போ் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படும் நபா்களின் வீடுகளைச் சுற்றிலும் கொசு மருந்து அடித்தல், தெருக்களை சுத்தம் செய்தல், கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT