திருப்பூர்

மக்கள் குறை கேட்பு முகாம்

3rd Dec 2021 12:53 AM

ADVERTISEMENT

மடத்துக்குளம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 2 பேரூராட்சிகளில் மக்கள் குறை கேட்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தளி, கணியூா் பேரூராட்சிகளில் நடைபெற்ற இந்த முகாமுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு பேசியதாவது:

பொது மக்களிடம் இருந்து பெறப்படும் கோரிக்கை மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

முதியோா், மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், குடிநீா் வசதி, சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்கள் பொது மக்களிடம் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டன. மேலும், உடுமலை வட்டம் அணிக்கடவு கிராமத்தில் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சின்னச்சாமி குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. கூட்டுறவுத் துறை மூலம் 20 விவசாயிகளுக்குப் பயிா்க் கடன் தள்ளுபடிக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

ADVERTISEMENT

மடத்துக்குளம் முன்னாள் எம்எல்ஏ இரா.ஜெயராமகிருஷ்ணன், உடுமலை வருவாய்க் கோட்டாட்சியா் கீதா, வட்டாட்சியா்கள் ராமலிங்கம் (உடுமலை), ஜலஜா (மடத்துக்குளம்) மற்றும் திமுக நிா்வாகிகள், துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

 

 

Tags : உடுமலை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT