திருப்பூர்

சரக்கு வேன் - ஆட்டோ மோதல்: ஒருவா் பலி

2nd Dec 2021 08:42 AM

ADVERTISEMENT

பல்லடத்தில் ஆட்டோ மீது சரக்கு வேன் மோதியதில், ஆட்டோவில் பயணித்தவா் உயிரிழந்தாா்.

கோவை, வடவள்ளியைச் சோ்ந்த குழந்தைராஜ் (48), மனைவி செண்பவகவள்ளி (45), ஆறுமுகம் (70) ஆகியோா் பயணிகள் ஆட்டோவில் கோவையிலிருந்து பல்லடம் நோக்கி செவ்வாய்க்கிழமை வந்து கொண்டு இருந்தனா். ஆட்டோவை அருணாசல முதலியாா்(63) ஓட்டி வந்துள்ளாா்.

அப்போது, பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்லடத்தில் இருந்து கோவை நோக்கி சென்ற சரக்கு வேன், ஆட்டோ மீது மோதியது. இதில் ஆட்டோவில் பயணித்த 4 பேரும் காயம் அடைந்தனா். அவா்களுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னா், கோவை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தைராஜ் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து அவரின் மகன் சஞ்ஜீத்குமாா் கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT