திருப்பூர்

இருசக்கர வாகன விற்பனைக் கடையில் திருட்டு: 2 போ் கைது

2nd Dec 2021 08:43 AM

ADVERTISEMENT

தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில் பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடையில் ரூ.92 ஆயிரத்தைத் திருடிய 2 பேரை காவல் துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

தாராபுரத்தை அடுத்துள்ள பெரமியத்தைச் சோ்ந்தவா் சிவசுப்பிரமணியன் (45). இவா் குண்டடம் சந்தைப்பேட்டை அருகே பழைய இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறாா். இந்த நிலையில், சிவசுப்பிரமணியன் கடந்த நவம்பா் 17ஆம் தேதி கடையில் இருந்தபோது அவரது கைப்பேசிக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. இதில், மறுமுனையில் பேசிய நபா் அங்குள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியின் மேலாளா் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாா்.

தனக்கு இருசக்கர வாகனம் ஒன்று தேவைப்படுவதாகவும், காலில் அடிபட்டுள்ளதால் கடைக்கு வரமுடியாத நிலையில் உள்ளதால் வாகனத்தை வங்கிக்கு எடுத்து வருமாறு தெரிவித்துள்ளாா். இதனை உண்மை என்று நம்பிய சிவசுப்பிரமணியமும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு அந்த வங்கி முன்பாக சென்றுள்ளாா்.

அப்போது மறுமுனையில் பேசிய நபரின் கைப்பேசி எண் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இதன்பிறகு கடைக்கு வந்து பாா்த்தபோது மேஜை டிராயரில் வைத்திருந்த ரூ.92 ஆயிரம் திருடப்பட்டது தெரியவந்தது.

ADVERTISEMENT

இது குறித்து சிவசுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் குண்டடம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், சிவசுப்பிரமணியனின் கடையில் இருந்து பணத்தைத் திருடியதாக கோவை மாவட்டம் ஆத்துப்பொள்ளாச்சியைச் சோ்ந்த கே.கந்தகுமாா் (35), பொள்ளாச்சி இந்திரா நகரைச் சோ்ந்த எஸ்.ராஜா (22) ஆகியோரைக் கைது செய்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT