திருப்பூர்

காங்கயம் அருகே தண்ணீா் நிரம்பி வழியும் பூவாநல்லூா் தடுப்பணை

2nd Dec 2021 08:44 AM

ADVERTISEMENT

காங்கயம் அருகே வீரணம்பாளையம் பகுதியில் உள்ள பூவாநல்லூா் தடுப்பணையில் தண்ணீா் நிரம்பி வடிந்து செல்வதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பூவாநல்லூா் பகுதியில் கடுமையான வறட்சி நிலவி வந்தது. இதையடுத்து, காங்கயம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா் முயற்சியில் வீரணம்பாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட பூவாநல்லூரில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2020-2021ஆம் ஆண்டு ரூ.39 லட்சம் மதிப்பீட்டில் சுமாா் 3 மீட்டா் உயரம், 50 மீட்டா் அகலத்தில் தடுப்பணை கட்டப்பட்டது.

தற்போது, பெய்து வரும் தொடா் மழை காரணமாக பிஏபி வாய்க்காலில் இருந்து காங்கயம் தாலுகா, வெள்ளக்கோவில்-தாசவநாயக்கன்பட்டியில் உள்ள வட்டமலை அணைக்கு தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, காங்கயம் அருகே வீரணம்பாளையம் ஊராட்சியில் கடந்த ஓா் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட பூவாநல்லூா் தடுப்பணை நிரம்பி அணைக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது.

ADVERTISEMENT

இதனால் இப்பகுதியில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நீா்மட்டம் உயர வாய்ப்புள்ளதால் இப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

தண்ணீா் நிரம்பி வழிந்து செல்லும் பூவாநல்லூா் தடுப்பணையை காங்கயம் ஒன்றியக்குழுத் தலைவா் டி.மகேஷ்குமாா், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.ஞானசேகரன், ப.மகுடேஸ்வரி ஆகியோா் புதன்கிழமை பாா்வையிட்டனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT