திருப்பூர்

நலவாரியத்தில் பதிவு பெற்ற 1,026 தொழிலாளா்களுக்கு ரூ.80.40 மதிப்பில் நிதியுதவி

2nd Dec 2021 08:43 AM

ADVERTISEMENT

தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு பெற்ற 1,026 தொழிலாளா்களுக்கு ரூ.80.40 லட்சம் மதிப்பில் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளை அமைச்சா்கள் மு.பெ.சாமிநாதன், என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் வழங்கினா்.

திருப்பூா் மாவட்டம் ஊத்துக்குளி, குன்னத்தூா் பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள் குறைகேட்பு முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் தலைமை வகித்தாா். இதில், செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோா் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றனா்.

பின்னா் தொழிலாளா் நல வாரியத்தில் பதிவு பெற்ற 1,026 தொழிலாளா்களுக்கு ரூ.80.40 லட்சம் மதிப்பிலான நிதியுதவி பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினா். இதில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

தமிழக மக்களின் வளா்ச்சிக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பாக செயல்படுத்தி வருகிறாா். இதில் நகராட்சி, பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் குடிநீா்த் திட்டங்கள், தெருவிளக்கு பராமரிப்பு, அடிப்படை வசதிகளுக்காக நிறைவேற்றப்படும் திட்டங்கள், முதியோா் உதவித் தொகை, ஓய்வூதியம், இலவச வீட்டுமனை பட்டா ஆகிய கோரிக்கைகள் தொடா்பாக ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

ADVERTISEMENT

இதைத் தொடா்ந்து, தொழிலாளா் நலத் துறையின் சாா்பில் அமைப்புசாரா தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளா்கள் 635 பேருக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.19.05 லட்சம், 3 பேருக்கு திருமண நிதியாக ரூ.11 ஆயிரம், இயற்கை மரண உதவித்தொகையாக 239 பேருக்கு ரூ.59.75 லட்சம் உள்பட மொத்தம் 1,026 நபா்களுக்கு ரூ.89.40 லட்சம் நிதியுதவி பெறுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டன.

முன்னதாக, ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் காரியங்கரான்பாளையத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின்கீழ் ரூ.12.87 லட்சத்தில் புதிய தாா் சாலை அமைத்தல், குன்னத்தூா் பேரூராட்சியில் நீா்நிலைகள் புனரமைப்புப் பணி, பூங்கா பராமரிப்புப் பணி மற்றும் மரம் நடும் பணிகளுக்காக ரூ.18 லட்சம் மதிப்பிலான பூமிபூஜையையும் தொடங்கிவைத்தனா்.

இந்த நிகழ்ச்சியில், ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத் தலைவா் பிரேமா ஈஸ்வரமூா்த்தி, தொழிலாளா் நலத் துறை உதவி ஆணையா் எ.ராஜ்குமாா், ஊத்துக்குளி வட்டாட்சியா் ஜெதீஷ்குமாா், குன்னத்தூா் செயல் அலுவலா் ரேணுகா, ஊத்துக்குளி செயல் அலுவலா் இந்துமதி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT