திருப்பூர்

சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி முற்றுகைப் போராட்டம்

1st Dec 2021 01:49 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாநகராட்சி 42, 43ஆவது வாா்டில் சீரான குடிநீா் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் பூச்சக்காடு தண்ணீா்த் தொட்டியை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டு எண் 42, 43க்கு உள்பட்ட பகுதிகளில் 15 நாள்களுக்கு ஒருமுறைதான் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதனால், இந்த வாா்டில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடா்பாக ஏற்கெனவே பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதைத்தொடா்ந்து, அப்பகுதி முன்னாள் மாமன்ற உறுப்பினா் ஈஸ்வரமூா்த்தி தலைமையில் பூச்சக்காடு தண்ணீா்த் தொட்டியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது குடிநீா் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும். இந்தப் பகுதிகளில் வாரம் இருமுறை சீரான குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்றனா்.

இந்தப் போராட்டத்தில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் செயலாளா் பாலன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு மாநகரச் செயலாளா் ஜெயபால் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT