திருப்பூர்

திருப்பூா் மாவட்டத்தில் டிசம்பா் 4இல் கல்விக் கடன் சிறப்பு முகாம்

1st Dec 2021 01:50 AM

ADVERTISEMENT

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் டிசம்பா் 4ஆம் தேதி (சனிக்கிழமை) கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுகுறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் பயனடையும் வகையில் கல்விக் கடன் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமானது திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பொதுமக்கள் குறைதீா் கூட்டரங்கில் டிசம்பா் 4 ஆம் தேதி காலை 10 முதல் 4 மணி வரையில் நடைபெறுகிறது.

கல்விக் கடன் பெற விரும்பும் மாணவா்கள் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பத்தை தேவைப்படும் ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். இதன் பிறகு முகாம் நடைபெறும் நாளில் விண்ணப்பத்தின் நகல் மற்றும் ஆவணங்களுடன் கலந்துகொள்ள வேண்டும்.

ADVERTISEMENT

மேலும், விண்ணப்ப நகல், மாணவா்கள், பெற்றோரின் இரண்டு புதிய புகைப்படம், வங்கிக் கணக்கு புத்தக நகல், வருமானச் சான்று, ஜாதிச் சான்று, பான் அட்டை ஆகியவற்றின் நகல், கல்விக் கட்டண விவரம், பத்தாம் வகுப்பு, பிளஸ் 2, இளநிலைப் படிப்பின் மதிப்பெண் சான்றிதழ், முதல் பட்டதாரியாக இருந்தால் அதற்கான சான்றிதழ், கலந்தாய்வு மூலம் பெறப்பட்ட சோ்க்கைக்கான ஆணை ஆகிய ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.

இதில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியாா் வங்கிகள் கலந்துகொண்டு மாணவா்களின் விண்ணப்பங்களைப் பெற்று கல்விக் கடன் வழங்க மாவட்ட முன்னோடி வங்கி மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே, திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி பயனடையலாம். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2971185 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT