திருப்பூர்

சேவூர் அருகே முதியவர் கொலை: இளைஞர் தலைமறைவு

22nd Aug 2021 08:14 PM

ADVERTISEMENT

சேவூர் அருகே ராமியம்பாளையத்தில் முதியவர் கொலை, தொடர்புடைய இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம் சேவூர் அருகே ராமியம்பாளையம் பால் கூட்டுறவு சங்கம் பகுதியில் தனியாக வசித்து வருபவர் ராமசாமி மகன் வெங்கடாசலம்(80). இவரது வீட்டிற்கு அருகில் வசித்து வருபவர் ராசு மகுன் சந்தோஷ்(25).

இதையும் படிக்க- கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு நாளை முதல் பேருந்துச் சேவை 

இவர்களுக்குள் ஏற்கனவே நிலத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை வழக்கம் போல ஏற்பட்ட தகாறில் மது போதையில் இருந்த சந்தோஷ் கட்டையால் தாக்கியதில் வெங்கடாசலம் உயிரிழந்தார்.

ADVERTISEMENT

வெங்கடாசலம் உயிரிழந்ததை அறிந்த சந்தோஷ் அங்கிருந்து தலைமறைவானர். தகவலறிந்த சேவூர் போலீஸார், வெங்கடாசலத்தின் பிரேதத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : murder
ADVERTISEMENT
ADVERTISEMENT