திருப்பூர்

திருப்பூர்: மூலனூரில் ரூ.1.05 கோடிக்கு பருத்தி விற்பனை 

20th Aug 2021 04:23 PM

ADVERTISEMENT

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ரூ.1.05 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.

இதையும் படிக்க | நீர்நிலைகள், நீர்வழித் தடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு அபராதம்

இந்த மறைமுக ஏலத்துக்கு திருச்சி, திண்டுக்கல், கரூா், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 386 விவசாயிகள் தங்களுடைய 4,352 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனர். மொத்தம் 1,434 குவிண்டால் வரத்து இருந்த நிலையில் திருப்பூர், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த 21 வணிகர்கள் விற்பனையில் பங்கேற்றனர்.

விலை குவிண்டால் ரூ.6,200 முதல் ரூ.8,209 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ.7,550. மொத்தம் ரூ.1 கோடியே 5 லட்சத்து 77 ஆயிரத்து 794 க்கு விற்பனை நடைபெற்றது. ஏற்பாடுகளை திருப்பூர் விற்பனைக்குழு முதுநிலை செயலாளர் ஆர்.பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளர் சிவக்குமார் செய்திருந்தனர். இந்த வார விலையில் பெரியளவில் மாற்றம் இல்லை.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT