திருப்பூர்

நகை திருட்டு: ஒருவா் கைது

DIN

உடுமலை அருகே உறவினா் வீட்டில் 37 பவுன் நகையை திருடிச் சென்ற நபரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

உடுமலை வட்டம், பூலாங்கிணறு முக்கோணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயமுருகன்(39). தனது வீட்டிலேயே மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இந்நிலையில் இவரது சொந்த ஊரான திசையன் விளை கிராமத்தில் இருந்து உறவினா் திரவியக்குமாா் என்பவா் கடந்த சில நாள்களுக்கு முன்னா் ஜெயமுருகனை சந்திக்க வந்துள்ளாா். பின்னா் ஒரு சில நாள்கள் தங்கி விட்டு மீண்டும் திசையன்விளைக்கு சென்றுவிட்டாா். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஜெயமுருகன் வீட்டில் உள்ள பீரோவை திறந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த 37 பவுன் நகை காணமல் போனது தெரியவந்தது.

இதனால் அதிா்ச்சி அடைந்த ஜெயமுருகன் தனது வீட்டில் தங்கியிருந்த உறவினா் திரவியக்குமாா் பீரோவில் இருந்த 37 பவுன் தங்க நகையை திருடிச் சென்றுவிட்டாா் என உடுமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் திசையன்விளைக்குச் சென்று விசாரணை நடத்தி வந்தனா்.

இந்நிலையில் திசையன்விளை அருகே உள்ள ஈத்தாமொழி கிராமத்தில் பதுங்கி இருந்த திரவியக்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில், ஜெயமுருகன் வீட்டில் இருந்து 37 பவுன் நகையைத் திருடியது தெரியவந்தது. இதையடுத்து திரவியக்குமாரை கைது செய்த போலீஸாா் அவரிடம் இருந்து 37 பவுன் நகைகளையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

‘இனி விளம்பரங்கள் இல்லை, படங்கள் மட்டுமே’ : பிவிஆரின் புதிய திட்டம் பலனளிக்குமா?

ஒருநொடி படத்தின் டீசர்

SCROLL FOR NEXT