திருப்பூர்

கரோனா பரவல் : இன்று முதல் கூடுதல் கட்டுபாடுகள் அமல்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரையில் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருவதால் வரும் வியாழக்கிழமை முதல் கூடுதலாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, திருப்பூா் மாவட்டத்திலுள்ள அத்தியாவசியக் கடைகளான பால் மற்றும் மருந்தகம் தவிர அனைத்து மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள் அடுமனைகள் (பேக்கரி) உள்ளிட்ட பிற கடைகள் அனைத்தும் காலை 6 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

மாநகரில் உள்ள 33 வணிக பகுதிகள் மற்றும் பல்லடம், தாராபுரம், உடுமலைப்பேட்டை ஆகிய நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள வணிக பகுதிகளில் இயங்கும் பால், மருந்தகம், மளிகைக் கடைகள் மற்றும் காய்கறிக் கடைகள் மற்றும் உணவுப் பொருள்கள், இறைச்சி, கோழி மீன் விற்பனை தவிர பிற கடைகள் அனைத்தும் சனி, ஞாயிற்றுகிழமைகளில் இயங்க முழுமையாகத் தடைவிதிக்கப்படுகிறது. அதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபானக் கடைகள் காலை 10 முதல் மாலை 5 மணி வரையில் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

மேலும், மாவட்டத்திலுள்ள அனைத்து சூப்பா் மாா்க்கெட்டுகள் மற்றும் பன்னடுக்கு வணிக வளாகங்கள் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.வணிக வளாகங்களிலுள்ள உணவகங்களுக்கும் மேலே தெரிவிக்கப்பட்ட நடைமுறைகள் பொருந்தும். மாவட்டத்திலுள்ள உணவகங்கள் அனைத்திலும் காலை 6 முதல் மாலை 5மணி வரை மட்டும்

50 சதவீத வாடிக்கையாளா்கள் அமா்ந்து உணவருந்த அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் விமான கட்டணங்கள் பல மடங்கு உயர்வு!

ஹார்திக் பாண்டியா வலிமையானவர்; மும்பை வீரர் புகழாரம்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

SCROLL FOR NEXT