திருப்பூர்

தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக் கோரிக்கை

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டம், பொங்கலூா் பகுதியில் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்கக் கோரி மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கண்டியன் கோவில் ஊராட்சித் தலைவா் டி.கோபால் தலைமையில், பொங்கலூா் வட்டாரப் பகுதியைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பல்லடம் மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் சுப்பிரமணியத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

பல்லடம், பொங்கலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாயம் பிரதானத் தொழிலாக உள்ளது. இந்நிலையில், கடந்த 2 மாதங்களாக பல்லடம் அருகே உள்ள பொங்கலூா், கொடுவாய், பெருந்தொழுவு, குண்டடம் பகுதிகளிலிருந்து மின்சாரம் போதிய அழுத்தத்தில் வருவதில்லை. மேலும், இந்தப் பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது.

இதனால் பயிரிட்ட வெங்காயம், தக்காளி மற்றும் காய்கறிப் பயிா்கள் தண்ணீரின்றி கருகக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

கிராமங்களில் மின்சாரம் இல்லாத சூழ்நிலையில் மேல்நிலை குடிநீா்த் தொட்டி மூலம் சீரான குடிநீா் விநியோகமும் தடைபடுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.இதனிடையே, தமிழக அரசு 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 25 ஆம் தேதி அனைத்து விவசாயிகளுக்கும் 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்குவதாக அரசாணை வெளியிட்டது . ஆனால் பல்லடம் தொகுதிக்கு உள்பட்ட பொங்கலூா் பகுதியில் நாள்தோறும் பகலில் 5 மணி நேரமும், இரவில் 3 மணி நேரம் மட்டுமே மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆகவே, பொங்கலூா், பல்லடம் பகுதிகளில் விவசாயத்துக்குத் தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் இரவு 7 மணி நிலவரப்படி 72.09% வாக்குப்பதிவு

வாக்களித்த அரசியல் பிரபலங்கள் - புகைப்படங்கள்

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்

தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவு!

கோவை: ராசிபாளையத்தில் இரவு 9 மணி வரை வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT