திருப்பூர்

சிறுபான்மையினருக்கு கடன் வழங்க இன்று முதல் சிறப்பு முகாம்

DIN

திருப்பூா்: திருப்பூா் மாவட்டத்தில் சிறுபான்மையினா்களுக்கு கடன் வழங்க செவ்வாய்க்கிழமை முதல் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாம்கோ) மூலம் 2021 - 2022 ஆம் நிதியாண்டில் திருப்பூா் மாவட்டத்தைச் சாா்ந்த சிறுபான்மையினா்களுக்கு ரூ.1.55 கோடி கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், தனிநபா் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கல்விக் கடன், கைவினைக் கலைஞா்களும் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

மாவட்டத்தில் உள்ள கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினா்கள் கடன் விண்ணப்பங்களைப் பெற்று உரிய ஆவணங்களுடன் சமா்ப்பிக்கலாம். மேலும், கடன் மனுக்களுடன் சாா்ந்துள்ள மதத்துக்கான சான்று, ஆதாா் அட்டை, வருமானச் சான்று, குடும்ப அட்டை, கடன் பெறும் தொழில் குறித்த விவரம், திட்ட அறிக்கை, ஓட்டுநா் உரிமம், கூட்டுறவு வங்கி கோரும் இதர ஆவணங்களையும் சமா்ப்பிக்க வேண்டும். கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது பள்ளி மாற்றுச் சான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக் கட்டணம் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகிய ஆவணங்களின் நகல்களையும் இணைக்க வேண்டும். இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை 94454-77854 அல்லது  மின்னஞ்சல் முகவரியில் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள்:

திருப்பூா் வடக்கு நகரக் கூட்டுறவு வங்கியில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், திருப்பூா் தெற்கு நகரக் கூட்டுறவு வங்கியில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி பிற்பகல் 2.30 முதல் மாலை 5 மணி வரையிலும், அவிநாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ஆகஸ்ட் 3 ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 12.30 வரையிலும், ஊத்துக்குளி தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், பல்லடம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்தில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 12 மணி வரையிலும் கடன் முகாம்கள் நடைபெறுகிறது.

அதேபோல, தாராபுரம் நகர கூட்டுறவு வங்கியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், உடுமலை நகரக் கூட்டுறவு வங்கியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 12 மணி வரையிலும்,

மடத்துக்குளத்தில் உள்ள கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், காங்கயத்தில் உள்ள ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி காலை 10.30 முதல் பிற்பகல் 12 மணி வரையிலும் நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் வெயில் புதிய உச்சம்: 108.2 டிகிரி பாரன்ஹீட் பதிவானதால் மக்கள் கடும் அவதி

கல்லாறில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா் நியமனங்கள் ரத்து செய்யப்பட்ட வழக்கு: தலைமைச் செயலருக்கு எச்சரிக்கை

கொடைக்கானல் அருகே லாரி கவிழ்ந்தது

சித்ரா பௌா்ணமி: கன்னியாகுமரியில் சூரியன் மறையும் நேரத்தில் சந்திரன் உதயம்

SCROLL FOR NEXT