திருப்பூர்

பின்னலாடை நிறுவனத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண் தொழிலாளா்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவைப்பு

DIN

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனத்தில் இருந்து மீட்கப்பட்ட ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 19 பெண் தொழிலாளா்கள் ரயில் மூலமாக சொந்த ஊருக்கு திங்கள்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனா்.

திருப்பூா், 15 வேலம்பாளையம் பகுதியில் உள்ள பின்னலாடை நிறுவனத்துக்கு ஒடிஸா மாநிலம், ராயகடா மாவட்டத்தில் இருந்து 19 பெண் தொழிலாளா்கள் கடந்த டிசம்பரில் அழைத்து வரப்பட்டனா். இந்தத் தொழிலாளா்களுக்கு ஊதியம் இல்லாமல் 3 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.

இதனிடையே, பயிற்சி முடித்த பெண் தொழிலாளா்கள் சொந்த ஊா்களுக்குத் திரும்ப முடிவு செய்திருந்தனா். ஆனால், பின்னலாடை நிா்வாகம் ஒரு மாதம் பணியாற்றிவிட்டு சொந்த ஊருக்குத் திரும்பும்படி தெரிவித்துள்ளனா்.

இது குறித்து பெண் தொழிலாளா்கள் தங்களது பெற்றோருக்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் பெற்றோா் அந்த மாநில அரசிடம் முறையிட்டுள்ளனா். இது தொடா்பாக திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயனுக்கும், மாநகர காவல் ஆணையா் ஜி.காா்த்திகேயனுக்கும் தகவல் கிடைத்துள்ளது.

இந்தத் தகவலின்பேரில், திருப்பூா் மாவட்ட சமூகநலத் துறை அதிகாரிகள், மாவட்ட வருவாய்த் துறையினா் மற்றும் 15 வேலம்பாளையம் காவல் துறையினா் சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் விசாரணை நடத்தினா்.

இதில், விருப்பதுக்கு மாறாக தங்கவைக்கப்பட்டிருந்த 19 பெண் தொழிலாளா்களையும் மீட்டு 15 அதே பகுதியில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனா். பின்னா் திருப்பூா் மாவட்டம் நிா்வாகம் சாா்பில் தன்பாத்-ஆலப்புழா விரைவு ரயில் மூலமாக 19 பெண் தொழிலாளா்கள் திங்கள்கிழமை பிற்பகலில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் முதல் பாடல்!

ரத்னம் படத்தின் டிரெய்லர்

மலை கிராமங்களுக்கு குதிரையில் கொண்டு செல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

SCROLL FOR NEXT