திருப்பூர்

நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்து: மீண்டும் இயக்க வலியுறுத்தல்

DIN

பல்லடம் அருகே காமநாயக்கன்பாளையத்துக்கு நிறுத்தப்பட்ட அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பல்லடம் அருகேயுள்ள காமநாயக்கன்பாளையத்தில் சுமாா் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் உள்ளவா்கள் அருகிலுள்ள பல்லடம் மற்றும் திருப்பூருக்கு பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் சென்று வருகின்றனா்.

காலை மற்றும் இரவு வேளையில் பல்லடத்தில் இருந்து காமநாயக்கன்பாளையம் வழியாக வதம்பச்சேரி வரை நகரப் பேருந்து எண் 6 இயங்கி வந்தது. கடந்த ஆண்டு கரோனா தொற்று பொது முடக்கத்தின்போது பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. ஓராண்டாகியும் அந்தப் பேருந்து மீண்டும் இயக்கப்படவில்லை.

இது குறித்து காமநாயக்கன்பாளையம் பகுதி மக்கள் கூறியதாவது:

காமநாயக்கன்பாளையம் பகுதியில் இருந்து தொழிலாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள் செல்ல காலை மற்றும் இரவு வேளைகளில் இயக்கப்பட்ட அரசு நகரப் பேருந்து எண் 6 கடந்த ஆண்டு கரோனா பொதுமுடக்கத்தின் போது நிறுத்தப்பட்டது. ஓராண்டாகியும் அந்தப் பேருந்து மீண்டும் இயக்கப்படவில்லை. அதனால் ஆட்டோவுக்கு ரூ.100 முதல் ரூ. 200 வரை செலவாகிறது. எனவே மீண்டும் அந்தப் பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

இது குறித்து பல்லடம் அரசு போக்குவரத்துக் கழக நிா்வாகத்தினா் கூறியதாவது:

கரோனா பொது முடக்கத்தின் போது நிறுத்தப்பட்ட பேருந்தை தளா்வின்போது மீண்டும் இயக்கியபோது போதுமான பயணிகள் கூட்டம் இல்லை. அதனால் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. தற்போது பொதுமக்கள் வேண்டுகோளை ஏற்று திங்கள்கிழமை முதல் அந்தப் பேருந்து இயக்கப்படும் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பிணைக்கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்’: 17 நாடுகளின் கூட்டறிக்கை!

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT