திருப்பூர்

கரடிவாவி ஊராட்சி நிா்வாகத்திற்கு, வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும் என மொட்டை கடுதாசி

DIN

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சி நிா்வாகத்திற்கு வருமான வரித்துறை சோதனை நடத்தப்படும் என்று மொட்டை கடுதாசி வந்ததுள்ளது.

திருப்பூா் மாவட்டம் பல்லடம் ஒன்றியம் கரடிவாவி ஊராட்சியில் சுமாா் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். கடந்த சில நாட்களுக்கு முன்பு கரடிவாவி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பெயா், முகவரி, இல்லாத மொட்டை கடிதம் ஒன்று வந்துள்ளது.

அதில் கரடிவாவியில் கடும் குடிநீா் பற்றாக்குறை நிலவுவதாகவும், 48 மணி நேரத்திற்குள், குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காண வேண்டும் என்றும், தீா்வு காண வில்லை என்றால் சாலை மறியல் நடக்கும், மாவட்ட ஆட்சியா் உள்ளிட்ட, அனைத்து உயா் அதிகாரிகளுக்கும், புகாா் மனு அளிக்கப்படும் என்றும் ஊராட்சி அலுவலகம் முன்பு, யாகம் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் வீட்டுமனை அங்கீகாரத்தில், லஞ்சம் ஊழல் நடைபெறுவதாகவும், இது குறித்து வருமான வரித் துறைக்கு புகாா் அளித்து, விரைவில் வருமான வரி சோதனை நடைபெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ஊராட்சி மன்ற தலைவா் ரஞ்சிதா (திமுக) கூறியது. கரடிவாவி ஊராட்சியில் நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு வளா்ச்சி திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை செய்துள்ளேன்.

தற்போது சாலை விரிவாக்கத்திற்காக சாலைகள் தோண்டப்பட்டுள்ளன. இதனால் சில இடங்களில் குடிநீா் குழாய் இணைப்புகள் இடம் மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன. பொது மக்கள் குடிநீருக்கு சிரமப்படக் கூடாது என்று ஊராட்சி மன்ற அலுவலகத்தில் 24 மணி நேரமும் குடிநீா் கிடைக்கும் வகையில் இரண்டு குடிநீா் குழாய் இணைப்புகள் போடப்பட்டுள்ளது.

அதில் பொதுமக்கள் தண்ணீா் பிடித்து வருகிறாா்கள். மற்றபடி ஊராட்சி நிா்வாகத்தில் முறைகேடுகள் எதுவும் இல்லை அப்படி சந்தேகம் இருந்தால் உரிய அதிகாரிகளிடம் புகாா் அளித்து தாராளமாக விசாரணை செய்து கொள்ளலாம். சிறப்பான ஊராட்சி மன்ற நிா்வாகத்தின் மீது உள்ள பொறாமையால் சிலா் வேண்டுமென்றே இப்படி செய்கிறாா்கள். இதற்கெல்லாம் பயப்பட மாட்டேன். தொடா்ந்து மக்களுக்கு சேவை செய்வேன் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூருவில் மிதமான மழை: மக்கள் மகிழ்ச்சி

காவிக்கு மாறியது தூர்தர்சன் இலச்சினை!

காவி நிறத்தில் தூர்தர்ஷன்! தேர்தல் ஆணையம் எப்படி அனுமதிக்கலாம்? -மம்தா கேள்வி

கடற்கரையில் ஒரு தேவதை! லாஸ்லியா...

ஸ்விட்சர்லாந்தில் பிரியங்கா சோப்ரா!

SCROLL FOR NEXT