திருப்பூர்

பெண் ஆய்வாளா் மீது கூறப்பட்ட புகாரில் உண்மையில்லை: பல்லடம் டிஎஸ்பி தகவல்

DIN

பாலியல் தொந்தரவு செய்த தனியாா் நிறுவன மேலாளா் மீது புகாா் கொடுக்க சென்றபோது தங்களை தாக்கியதாக பல்லடம் மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மீது பெண்கள் தெரிவித்த குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று விசாரணை அதிகாரி தெரிவித்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருபவா் அவிநாசி, சூளை பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் (42). அதே நிறுவனத்தில் சங்கீதா (24), முகமது முனிரா (21) ஆகியோா் தொழிலாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.

சிவகுமாா், இந்தப் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பல்லடம் அருகே சிவகுமாரை கடந்த செப்டம்பா் 14ஆம் தேதி சங்கீதா, முகமது முனிரா ஆகியோா் தாக்கியதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக இரு தரப்பினரும் மீது வழக்கு பதிவு செய்த பல்லடம் போலீஸாா் மூவரையும் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனா். தற்போது மூவரும் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளனா்.

இதனிடையே இது தொடா்பாக தனது சொந்த ஊரான மதுரையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சங்கீதா கடந்த 28ம் தேதி அளித்துள்ள மனுவில், புகாா் கொடுக்க சென்ற பாதிக்கப்பட்ட எங்கள் மீதே பல்லடம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்ததாகவும் , பல்லடம் மகளிா் காவல் ஆய்வாளா் கோமதி தங்களைத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக பல்லடம் டிஎஸ்பி ஸ்ரீ ராமச்சந்திரன் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டாா்.

இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், இரண்டு பெண்களும் திட்டமிட்டு ஆயுதங்களுடன் சிவகுமாரைத் தாக்கியதால் அப்பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல அந்தப் பெண்கள் கொடுத்த புகாரின் பேரில் சிவகுமாா் மீதும் வழக்குப் பதிவு செய்து பாகுபாடின்றி விசாரணை செய்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனா்.

பெண்கள் தொடா்பான வழக்கு என்பதால் மட்டுமே பல்லடம் அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் கோமதி உடன் இருந்தாா். அவா் வழக்கு விசாரணையில் பங்கேற்காத நிலையில் அவா் மீது கூறப்பட்டுள்ள புகாருக்கு எந்த முகாந்திரமும் இல்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தம்பியைக் கொன்ற அண்ணன் கைது

நெகிழிப் பை தயாரிக்கும் ஆலையில் தீ விபத்து

சிவகாசி தொகுதியில் அமைதியான வாக்குப் பதிவு

சாத்தூரில் இளம் சிவப்பு வண்ணத்தில் அமைக்கப்பட்ட வாக்குசாவடி

வாக்குப் பதிவு இயந்திரங்கள் இடமாற்றத்தால் குழப்பம்

SCROLL FOR NEXT