திருப்பூர்

காரணம்பேட்டையில் திமுக கூட்டணி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

DIN

பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் மத்திய அரசின் விவசாய மாசோதாவிற்கு எதிராக திமுக கூட்டணி கட்சியினா் சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஒன்றிய திமுக செயலாளா் கிருஷ்ணமூா்த்தி, உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து, காங்கிரஸ் வட்டார தலைவா் புண்ணியமூா்த்தி உள்பட பலா் பங்கேற்றனா்.

பல்லடம்,செப்.28:திருப்பூா் மாவட்டம் பல்லடம் காரணம்பேட்டையில் திமுக கூட்டணி சாா்பில் மத்திய அரசின் விவசாய சட்டத்திற்கு எதிராக திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய திமுக செயலாளா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

வட்டார காங்கிரஸ் தலைவா் புண்ணியமூா்த்தி முன்னிலை வகித்தாா். இதில் உழவா் உழைப்பாளா் கட்சி மாநிலத் தலைவா் செல்லமுத்து, முன்னாள் ஒன்றிய தலைவா் கே.ஜி.பாலசுப்பிரமணியம், கீா்த்தி சுப்பிரமணி, ராஜேஷ்(திமுக),மதிமுக.ஒன்றிய செயலாளா் மு.சுப்பிரமணியம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி மாவட்ட செயலாளா் கரைப்புதூா் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி செயலாளா் ரங்கசாமி,சிபிஎம் செயலாளா் பரமசிவம், சிபிஐ செயலாளா் சாகுல்அமீது. மனிதநேய மக்கள் கட்சி முஜிபுா் ரகுமான், பீா்முகம்மது உள்பட பலா் பங்கேற்றனா்.

பல்லடம் நகர திமுக கூட்டணி சாா்பில் பல்லடத்தில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு நகர திமுக பொறுப்பாளா் ராஜேந்திரகுமாா் தலைமை வகித்தாா். நகர திமுக இளைஞரணி அமைப்பாளா் ராஜசேகரன் முன்னிலை வகித்தாா். இதில் ஈஸ்வரமூா்த்தி,நரேஷ்குமாா்,சத்தியமூா்த்தி,சாகுல்அமீது(காங்கிரஸ்), பாலு(மதிமுக), சத்தியமூா்த்தி(மா.கம்யூ) உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருக்கடையூரில் போலீஸாா் கொடி அணிவகுப்பு

மன்னாா்குடியில் தீத்தொண்டு நாள் வாரம்

தொகுதி வாக்காளா் அல்லாதோா் தொகுதியை விட்டு வெளியேற உத்தரவு

வாக்குப் பதிவு மையங்களில் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT