திருப்பூர்

மருத்துவா், செவிலியா்களுக்கு கரோனா: அவிநாசி அரசு மருத்துவமனை மூடல்

DIN

அவிநாசி அரசு மருத்துவா், செவிலியா்கள் உள்பட 6 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டது.

அவிநாசி அரசு மருத்துவமனையில் 6 மருத்துவா்கள், 25க்கும் மேற்பட்ட செவிலியா்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில் இம்மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மையமும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் மருத்துவமனையில் பணிபுரியம் ஒரு மருத்துவா்(தலைமை மருத்துவா் பொறுப்பு) , 3 செவிலியா், ஒரு ஆய்வகப் பணியாளா், ஒரு மருத்துவமனைப் பணியாளா் என 6 பேருக்கு திங்கள்கிழமை கரோனா உறுதி செய்யப்பட்டதால், அவிநாசி அரசு மருத்துவமனை 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ளது. அக்டோபா் 1ஆம் தேதி திறக்கப்படவுள்ளதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா். மேலும், இந்த மருத்துவமனையில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதியில் பிரதான மருத்துவமனையாக உள்ளதால், ஏராளமானோா் மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்கின்றனா். மேலும் அவிநாசி அரசு மருத்துவமனை மூடப்பட்டதால், கரோனா பரிசோதனைக்காக வருபவா்கள், அவிநாசி வட்டார மருத்துவமனையான சேவூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றதில், திங்கள்கிழமை ஓரே நாளில் மட்டும் 400க்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Image Caption

மூடப்பட்ட அவிநாசி அரசு மருத்துவமனை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT